பரிசு தொகுப்பு,-விலையில்லா வேட்டி சேலையுடன் பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடினோம்..முதல்வருக்கு வேலூர் மாவட்ட மக்கள் நெஞ்சார்ந்த நன்றி.
பரிசு தொகுப்பு,-விலையில்லா வேட்டி சேலையுடன்
பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடினோம்
முதல்வருக்கு வேலூர் மாவட்ட மக்கள் நெஞ்சார்ந்த நன்றி
வேலூர், ஜன. 29
தமிழர்களின் திருநாளாம் தைப் பொங்கலை ஏழை எளிய மக்கள் சிறப்பாகக் கொண்டாட
வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜெயலலிதா பொங்கல் பரிசு தொகுப்பு
அறிவித்து செயல்படுத்தி வந்தார்கள். தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால்
வேலை இழந்திருக்கின்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு,முதலமைச்சர்
பழனிச்சாமி (21.12.2020) அன்று அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களின்
குடும்பங்கள் பயன்பெறும் வகையில், தலா ரூ.2,500- ரொக்கத்துடன், ஒரு கிலோ
பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த
திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் ஒரு முழு நீள கரும்பு ஆகியவை
அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் மற்றும்
விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம் ஆகிய திட்டங்களை துவக்கி
வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் ஆணைக்கிணங்க, வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்
அ.சண்முகசுந்தரம் அறிவுரையின்;படி, கொரோனா நோய்த் தொற்று பாதுகாப்பினை
கருத்தில் கொண்டு பொதுமக்களின் இல்லங்களுக்கு நேரடியாக
கூட்டுறவுத்துறையின் பணியாளர்கள் மூலம் வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து
அரிசி குடும்ப அட்டைதாரர்களின் குடும்பங்கள் பயன்பெறும் வகையில்
ரூ.2,500ஃ- ரொக்கத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20
கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும்
ஒரு முழு நீள கரும்பு ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு
மற்றும் விலையில்லா வேட்டி சேலைகள் பெறுவதற்கான டோக்கன் வினியோகம்
26.12.2020 அன்று முதல் 30.12.2020 வரை வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, அமைச்சர் கே.சி.வீரமணி, மாவட்ட ஆட்சித்தலைவர்
அ.சண்முகசுந்தரம் கடந்த 04.01.2021 அன்று வேலூர் மாவட்டத்தில் பொங்கல்
பரிசு தொகுப்பு வழங்கும் பணிகளை துவக்கி வைத்தார்.
இது போன்ற சிறப்பான திட்டங்களை செயல்படுத்தியதின் மூலம், முதல்வர்
பழனிச்சாமி என்றென்றும் ஏழை, எளியோர், முதியவர்கள் மற்றும் பெண்களின்
நிலைமையை அறிந்து திட்டங்களை செயல்படுத்துவதையே நோக்கமாக கொண்டுள்ளார்.
இந்த திட்டத்தால் தாங்கள் பெரிதும் பயன் அடைந்ததாக வேலூர் மாவட்ட பொது
மக்கள் முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தனர். பொங்கல் பரிசு
தொகுப்புகள் மற்றும் ரொக்கம் ரூ. 2,500 பெற்று பயனடைந்த,
காசியம்மாள் க/பெ.முனிசாமி, புது அக்ராவரம் கூறியதாவது:
நான் எனது கணவர் மற்றும் 3 ஆண் பிள்ளைகளுடன் வசித்து வருகிறேன். என்
கணவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். தமிழக அரசு கொரோனா காலத்தில் ரேஷன்
பொருட்களை விலையில்லாமலும், ரூ.1000ஃ- வழங்கி எங்களை போல ஏழ்மையிலும்
வறுமையிலும் உள்ளவர்களுக்கு இந்த ஆண்டு பொங்கல் பரிசு ரூ.2,500ஃ-,
கரும்பு, சர்க்கரை வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்து
கொள்கிறேன்.
ஜெய்துனா க/பெ. முகமது இலியாஸ் என்பவர் கூறியதாவது:
என் கணவர் வாழைப்பழம் வியாபாரம் செய்து வருகிறார். எனக்கு 2 ஆண்
பிள்ளைகள் உள்ளனர். ஜாதி மத பேதமின்றி அனைவருக்கும் பொங்கல் பரிசு
ரூ.2,500 மற்றும் சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை அடங்கிய
தொகுப்புகளை வழங்கிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு எங்கள்
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை
தெரிவித்துக்கொள்கிறோம்.
கௌசியா க/பெ. கதிர்கான் என்பவர் கூறியதாவது:
எனது கணவர் ஆட்டோ ஓட்டுநர். எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஜாதி மத பேதமின்றி ரூ.2,500, இலவச
வேட்டி சேலை, அரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் மற்றும் ஒரு
முழுநீள கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கியதால் நாங்கள்
அனைவரும் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடிந்தது. என்
குடும்பத்தின் சார்பாகவும் எங்களை போன்ற ஏழை, எளிய குடும்பத்தினர்
சார்பாகவும் எங்களின் மகிழ்ச்சி கலந்த நன்றியினைத் தெரிவித்து
கொள்கிறோம்.
கௌசல்யா க/பெ. சீனிவாசன் என்பவர் கூறியதாவது:
வேலூர் புது அக்ராவரம் பகுதியில் வசித்து வருகிறேன். என் கணவர்
எலக்ட்ரிசியன் வேலை செய்கிறார். திருமணமாகி ஓராண்டு ஆகிறது. கொரோனா
காலத்தில் ரூ.1000-, உணவுப் பொருட்கள் வழங்கியும், தற்போது தமிழர்
திருநாளாம் பொங்களை சிறப்பாக கொண்டாட ரூ.2,500ஃ- மற்றும் பொங்கல் பரிசு
தொகுப்புகளை வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு மனமார்ந்த
நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இந்த தகவலை வேலூர் மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி
சு.மோகன், உதவி அதிகாரி பரத்குமார் தெரிவித்தனர்.