கலெக்டர்கள், மருத்துவ நிபுணர்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை..
கலெக்டர்கள், மருத்துவ நிபுணர்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை
மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலிக்காட்சி மூலம் இந்த ஆலோசனையை மேற்கொள்கிறார். முதலில், காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர்களுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.
மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனை கூட்டம் 11.30 மணிக்கு நடைபெறுகிறது.