யானைகுளம் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில் 72வது குடியரசு தினவிழா..
சென்னை ராயப்பேட்டை ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள யானைகுளம் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில், அதன் தலைவர் S. கைசர்பாஷ தலைமையில் இன்று இந்தியாவின் 72வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் குடியரசு தினத்தை முன்னிட்டு, யானைகுளம் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில் இப்பகுதியில் உள்ள மாணவ மாணவிகளுக்கு 4 போட்டிகள் நடத்தப்பட்டது, அதில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்கள். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ராயப்பேட்டை காவல்துறை உதவி ஆணையர் லட்சுமணன் அவர்கள் , பங்கேற்று தேசிய கொடி ஏற்றி, சிறப்புரையாற்றி, மாணவர்களுக்கு பரிசுகள் , சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். இந்த போட்டியானது, ஓவியம், பேச்சு,திருக்குறள்,கிராதே போன்றவைகளில் 250 பேர் மாணவர்கள் பங்கேற்றனர் அதில்105 பேர் வெற்றி பெற்றனர். இதில் முதலாம் மற்றும் இரண்டாம் பரிசுகள் கே.முகம்மது யாசர், எஸ்.கே சையத் பாத்திமா, எஸ்.கே.சையத் சமீர்,எச்.ஜீபைதா,எஸ்.சைய்புதீன், தொடர்ந்து ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தின் உளவுத்துறை பிரிவு முத்துபாண்டியன் அவர்களும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தினார். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மத்திய சென்னை தொகுதி தலைவர் சலீம் ஜாபர் சிறப்புரையாற்றினார் இவ்விழாவில் யானை குளம் குடியிருப்போர் நல சங்கத்தின் துணை தலைவர் Y.சையத் காஜாமொய்தீன், செயலாளர் A.அப்ரோஷ், பொருளாளர் I.முகமது அப்ரோஷ், துணை பொருளாளர் சையத் ஆரிப், இணைச்செயலாளர்கள் முஸ்தபா,குமார், ராமலிங்கம், பாஸ்கர், இளைஞர்கள் பிரிவு செயலாளர் அமீன்பாஷா உறுப்பினர்கள். வடிவேல்,சாகுல் ஹமீது, சலீம், பயாஸ், தாவர் அலி. ஆகியோர் உடனிருந்தனர்.