பிறந்த ஆண்‌ குழந்தை, குடும்பத்தினர்‌ வளாக்க இயலாத காரணத்தால்‌ அவர்களின்‌ விருப்பப்படி அரசு தொட்டில்‌ குழந்தை திட்டத்தில்‌ சோக்க விருப்பம்…

Loading

திருவண்ணாமலை மாவட்ட சமூக நலத்‌ துறை மூலமாக
திருவண்ணாமலை அரசு மருத்துவக்‌ கல்லூரி மற்றும்‌ மருத்துவமனையில்‌ கடந்த
21.01.2021 அன்று பிறந்த ஆண்‌ குழந்தை, குடும்பத்தினர்‌ வளாக்க இயலாத
காரணத்தால்‌ அவர்களின்‌ விருப்பப்படி அரசு தொட்டில்‌ குழந்தை திட்டத்தில்‌
சோக்க விருப்பம்‌ தெரிவித்த காரணத்தால்‌, இக்குழந்தை மாவட்ட சமூக நல
அலுவலக கட்டுப்பாட்டின்‌ கீழ்‌ திருவண்ணாமலை அரசு மருத்துவக்‌ கல்லாரி
மருத்துவமனையில்‌ செயல்பட்டு வரும்‌ அரசு தொட்டில்‌ குழந்தை திட்டத்தில்‌
உடனடியாக சேர்க்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌
சமூக நலத்‌ துறையின்‌ அரசு தொட்டில்‌ குழந்தை திட்டத்தில்‌
சோக்கப்பட்ட மேற்கண்ட ஆண்‌ குழந்தைக்கு மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌
திரு. சந்திப்‌ நந்தாரி அவர்கள்‌ “ஆதவன்‌’ என பெயர்‌ சுட்டி
திருவண்ணாமலையில்‌ செயல்பட்டு வரும்‌ குழந்தை நலக்‌ குழுமத்திடம்‌
ஒப்படைத்தார்‌. மாவட்ட சமூக நல அலுவலர்‌ (கூ.பொ.) திரு. பா. கந்தன்‌
மற்றும்‌ துறை அலுவலாகள்‌ உடன்‌ இருந்தனர்‌.
வெளியீடு: செய்தி மக்கள்‌ தொடர்பு அலுவலர்‌, திருவண்ணாமலை மாவட்டம்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *