தென்பெண்ணை ஆற்றீல் ரூ 25 கோடியீல் கட்டப்பட்ட தடுப்பணை திறப்பு விழா கண்ட மூன்று மாதத்திலே இடிந்து விழுந்து மக்களின் வரிப்பணம் வீனாய்போனதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

Loading

கடலூர் மாவட்டம்
பண்ருட்டி,வட்டம் எனதிரிமங்கலம்காவனூர் எல்லை தென்பெண்ணை ஆற்றீல் ரூ 25 கோடியீல் கட்டப்பட்ட தடுப்பணை திறப்பு விழா கண்ட மூன்று மாதத்திலே இடிந்து விழுந்து மக்களின் வரிப்பணம் வீனாய்போனதை கண்டித்தும், தரமில்லாமல் கட்டிய ஒப்பந்ததாரரை கைது செய்து அவரிடம் பணத்தை பறிமுதல் செய்து அணையீணை,சீர் அமைத்திட வேண்டும், பங்கு போட்டுக்கொண்ட ஆட்சியாளர்கள் மீது விசாரனை நடத்திட வேண்டும் எனவும் வலியுருத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் ஆர்.உத்தராபதி தலைமையில் நடைபெற்றது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில் இரு கட்சிகளின் நிர்வாகிகள் உதயகுமார்,மாதவன்,மதிவாணன்,சிவக்குமார்,சங்கர்,ஜீவாஞந்தம்,ஏழுமலை மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

0Shares

Leave a Reply