பதவியில் அமர வைக்கும் வாக்குவங்கி விவசாயிகளிடம் உள்ளதை ஆட்சியாளர்கள் மறக்க வேண்டாம் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்க தலைவர் பேட்டி…
திருவண்ணாமலைக்கு வருகை தந்த நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் இரா .வேலுச்சாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் .அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா பெருந்தொற்று காலங்களில் விவசாயிகள் பயிர் செய்த பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் சந்தைகளில் விற்பனை செய்ய முடியாமல் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது.
மேலும் வடகிழக்கு பருவமழை மற்றும் புயல்களின் அதீத மழை பொழிந்ததால் விவசாயிகளின் விளை நிலங்களில் விளைவித்த பயிர்கள் தண்ணீரில் முற்றிலும் மூழ்கி முளைத்தும், அழுகிப் போனது .இதனால் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மத்திய ,மாநில அரசுகள் தமிழக விவசாயிகள் வாங்கிய பயிர் கடன் மற்றும் பண்ணை சாரா கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும் .
திருவண்ணாமலையில்நடக்க இருந்த டிராக்டர் பேரணிக்கு திருவண்ணாமலையில் காவல்துறை அனுமதி அளிக்காதது சரியான நடவடிக்கை அல்ல.
இந்தியாவில் விவசாயிகள் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சியில் அமர முடியாது.அதிக வாக்கு வங்கி கொண்டவர்கள் விவசாயிகள் .இதனை மத்திய, மாநில அரசுகள் மறக்காமல் செயல்பட வேண்டும் .விரைவில் தமிழகத்தில் சட்டசபைதேர்தல் வருகிறது .அப்போது விவசாயிகள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது கிருஷ்ணகிரி மாவட்ட பொதுச்செயலாளர்
எம் .சரவணன், திருவண்ணாமலை மாவட்ட தலைவர் கிருபாகரன், மாவட்ட பொருளாளர் ராமலிங்கம், மாவட்ட செயலாளர் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.