சென்னை அண்ணாநகரில் உள்ள கொ. கந்தசாமி நாயுடு ஆடவர் கல்லூரியில் தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் இணைந்து நமது நாட்டின் 72-வது குடியரசு தினவிழாவை சிறப்பாக கொண்டாடினார்கள்.
சென்னை அண்ணாநகரில் உள்ள கொ. கந்தசாமி நாயுடு ஆடவர் கல்லூரியில் தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் இணைந்து நமது நாட்டின் 72-வது குடியரசு தினவிழாவை சிறப்பாக கொண்டாடினார்கள்.
இவ்விழாவில் கல்லூரி முதல்வர்(பொ) பேராசிரியர் Dr. G. பிரேமசுந்தரி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி தனிமனித சுதந்திரமும் நாட்டின் வளர்ச்சியும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் பேராசிரியர்கள், ஆசிரியரல்லாத அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தேசிய மாணவர் படை அதிகாரி முனைவர் G.R. ராம்குமார் அவர்கள் வரவேற்புரையும், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் C. சம்பத் அவர்கள் நன்றியுறையும் வழங்கினார்கள்.
நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் முனைவர் ல. வெங்கடேசன், முனைவர் ப. வினாயகமூர்த்தி மற்றும் உடற்கல்வி பேராசிரியர் முனைவர் S.V. அருண் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர்கள்.
இவ்விழாவினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் G. சிவகாமி அவர்கள் தொகுத்து வழங்கினார்.