மாதவரம் பகுதியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 குற்றவாளிகள் மற்றும் திருட்டு செல்போன்கள் வாங்கிய கடைக்காரர் கைது…
மாதவரம் பகுதியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 குற்றவாளிகள்
மற்றும் திருட்டு செல்போன்கள் வாங்கிய கடைக்காரர் கைது.
31 செல்போன்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல்.
சென்னை, விளாங்காடுபாக்கத்தில் வசிக்கும் ஜான்சி, வ/35, க/பெ.சரவணன் என்பவர்
25.10.2020 அன்று அவரது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது மாதவரம் சின்ன ரவுண்டனாவிலிருந்து வடபெரும்பாக்கம் செல்லும் வழியில்
ஜான்சி செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது, அவர்களுக்கு பின்னால் இருசக்கர
வாகனத்தில் வந்த 2 நபர்கள் ஜான்சியின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்து ஜான்சி M-1 மாதவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப்
பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
M-1 மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ
இடத்திற்கு சென்று சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை செய்தனர். மேலும்,
மாதவரம் காவல் மாவட்ட சைபர் குற்றப்பிரிவு குழுவினர், புகார்தாரர் செல்போனின் IMEI
எண்ணை கண்காணித்து , புகார்தாரரின் செல்போனை பயன்படுத்தி வந்த நபரை பிடித்து
விசாரணை செய்ததில், அவர் இருதயராஜ் என்பவரிடம் மேற்படி செல்போனை வாங்கியதாக
தெரிவித்தார்.
அதன்பேரில், இருதயராஜை பிடித்து விசாரணை செய்ததில், மேற்படி செல்போன்
பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கார்த்திக்கேயன் மற்றும் ஜாய்சன் ஆகியோர் செல்போன்
பறிப்புகளில் ஈடுபட்டு, தன்னிடம் விற்பதாகவும், அதனை தனது கடையில் வைத்து அதிக
விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.அதன்பேரில், மேற்படி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகள் 1.கார்த்திக்கேயன், வ/20, த/பெ.சுதாகர், செல்லியம்மன் கோயில் தெரு, கதிர்வேடு, புழல்,
சென்னை, 2.ஜாய்சன் ராபர்ட், வ/23, த/பெ.ஜோசப் பிராங்க், 2வது குறுக்கு தெரு, கலெக்டர்
நகர், கதிர்வேடு, புழல், 3.இருதயராஜ், வ/44, த/பெ.குணராஜன், செம்பியம் ரோடு, புழல்,
சென்னை (திருட்டு செல்போன்களை வாங்கி விற்கும் கடைக்காரர்) ஆகிய 3 நபர்களை கைது
செய்தனர். அவர்களிடமிருந்து புகார்தாரரின் செல்போன் உட்பட 31 செல்போன்கள் மற்றும்
குற்றச் செயலுக்கு பயன்படுத்திய பல்சர் இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல்
செய்யப்பட்டது.கைது செய்யப்பட்ட 3 குற்றவாளிகளும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.