குடியாத்தம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 125 வது பிறந்தநாள் விழா.
வேலூர் ஐனவரி 24
குடியாத்தம்நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 125 வது பிறந்தநாள் விழா.
வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. குடியாத்தம் நேதாஜி சவுக்கில் அமைந்துள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் திருவுருவ சிலைக்கு வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுரேஷ்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஆடிட்டர் கிருபானந்தம் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.நிகழ்வில் குடியாத்தம் வட்டார தலைவர்கள் வீராங்கன், ஜோதி கணேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தேவராஜ், கிருஷ்ணவேணி, விஜயன், விஜயேந்திரன், நவீன் பரத்குமார், கோவிந்தராஜ் Ex.BDO, பொன்னரசன், பூக்கடை பாலாஜி, சசிக்குமார், ஜலந்தர், ரஜினிகாந்த், கோவிந்தசாமி, ரூபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.