திருவள்ளூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் : மாவட்ட தேர்தல் அலுவலர் பா.பொன்னையா வெளியிட்டார் :

Loading

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பா.பொன்னையா அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் வெளியிட்டு பேசினார்.

திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்ட அலுவலர், திருவள்ளுர்,திருத்தணி, பொன்னேரி மற்றும் அம்பத்தூர் மற்றும் மண்டல அலுவலர்-1 மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர்,மண்டல அலுவலர்-7 மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி, அம்பத்தூர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களான வட்டாட்சியர் அலுவலகங்கள், ஆவடி மாநகராட்சி மற்றும் திருவள்ளுர் நகராட்சி அலுவலகங்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களான 3622 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள 1205 பள்ளிகளில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள இடங்களில் வைக்கப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வையிட்டு பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், இடமாற்றம் போன்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம்.திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் எண்ணிக்கை விவரம் பின்வருமாறு :

தொகுதியின் பெயர் ஆண் பெண் மற்றவை மொத்தம்
எண்ணிக்கை

கும்மிடிப்பூண்டி 330 137027 143708 41 280776
பொன்னேரி (தனி) 310 130689 136953 31 267673
திருத்தணி 329 141923 148501 28 290452
திருவள்ளுர் 296 133608 141055 26 274689
பூவிருந்தவல்லி (தனி) 387 175953 181861 60 357874
ஆவடி 427 218538 221369 98 440005
மதுரவாயல் 421 226245 222464 142 448851
அம்பத்தூர் 349 191502 191418 95 383015
மாதவரம் 467 224323 226288 106 450717
திருவொற்றியூர் 306 150309 154323 145 304777
========================================
மொத்தம் 3622 1730117 1767940 772 3498829
=========================================

கடந்த 16.11.2020 முதல் 15.12.2020 வரை வரப்பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் 1,28,429 வாக்காளர்கள் புதியதாக சேர்க்கப்பட்டும்;, 8101 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டும் என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *