அதிமுகவை நிராகரிக்கிறோம் என்னும் தலைப்பிலான மக்கள் சபை கூட்டத்தின் மூலம் 1கோடிக்கு அதிகமானோர் அதிமுகவை நிராகரித்து இருப்பதாக சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு தெரிவித்துள்ளார்.

Loading

அதிமுகவை நிராகரிக்கிறோம் என்னும் தலைப்பிலான மக்கள் சபை கூட்டத்தின் மூலம் 1கோடிக்கு அதிகமானோர் அதிமுகவை நிராகரித்து இருப்பதாக சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மேற்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய சிற்றரசு கடந்த டிசம்பர் 20ம் தேதி தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் அதிமுகவை நிராகரிப்போம் என்னும் தலைப்பிலான மக்கள் சபை கூட்டத்தை துவங்கினார்.

இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நடந்த கூட்டத்தின் வாயிலாக ஒரு கோடிக்கு அதிகமானோர் அதிமுகவை நிராகரித்து கையெழுத்திட்டுள்ளதாக சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு தெரிவித்துள்ளார்.

சென்னை மேற்கு மாவட்டத்தின் சார்பாக 80க்கும் மேற்பட்ட இடங்களில் மக்கள் சபை கூட்டம் நடைபெற்றிருப்பதாகவும், அந்தப் பகுதிகளில் மக்களின் கோரிக்கைக்களை கேட்டு உடனடியாக அதை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அப்போது சென்னை மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட தொகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் போட்டியிடுவது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மாவட்ட செயலாளர் சிற்றரசு, திருவல்லிக்கேணி மற்றும் ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் போட்டியிட அதிக அளவில் தொண்டர்கள் வலியுறுத்தி வருவதாகவும் இது தொடர்பாக தலைமை இடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *