வேலூர் மாவட்டத்தில் 660 பயனாளிகளுக்கு ரூ. 4 கோடியே 82 லட்சத்து90 ஆயிரம் நலத்திட்டங்களை அமைச்சர் வழங்கினர்.
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு வட்டத்தில் வருவாய் துறை , ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, மாற்று திறனாளிகள் நலத்துறை, மகளிர் திட்டம் ஆகிய துறைகளின் சார்பில் 660 பயனாளிகளுக்கு ரூ. 4 கோடியே 82 லட்சத்து90 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்டங்களை அமைச்சர் கே.சி. வீரமணி மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், ஆகியோர் வழங்கினர்.இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஜெ.பார்த்தீபன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சிகளில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பேசியதாவது.
மறைந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா வழியில் செயல்படும் தமிழக அரசு மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செய்து வருகிறது. மருத்துவத்துறையில் பல்வேறு புதிய யுக்திகளை கையான்டு கொரோனா தடுப்பு காலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் எடுத்தார். மருத்துவத்துறையில் புதிய மைல்கல்லாக ஏழை, எளியவர்கள் எளிதாக மருத்துவ வசதி பெற 2000 அம்மா மினி கிளினிக்குகளை திறக்க ஆணையிட்டுள்ளார்.இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகம் பள்ளிக்கல்வி, உயர்கல்வி, தொழில் கல்வியில் முன்னனி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. கொரோனா தடுப்பு காலத்தில தமிழர் திருநாளாம் பொங்கலை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாட ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.2500, விவசாயிகளின் செல்ல பிராணியான காளை மாடுகளை வைத்து பொங்கல் திருநாளில் ஜல்லிகட்டு, மஞ்சுவிரட்டு போன்ற வீர விளையாட்டுகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.வேலூர் மாவட்டத்தில் மட்டும் 40 கிராமப் பகுதியில் முதலமைச்சரின் அம்மா மினி கிளிக்குகள் துவங்கப்படவுள்ளது. முதல் கட்டமாக 11 மினி கிளினிக்குகள் இதுவரை துவக்கி வைக்கப்பட்டுள்ளது.மருத்துவபடிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளித்து அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள் 377 பேருக்கு மருத்துவராக கூடிய வாய்ப்பை பெற்று தந்தவர் தமிழக முதல்வர் அவர்கள்.
பேர்ணாம்பட்டு வட்டத்தில் அனைத்து துறைகளின் சார்பில் 660 பயனாளிகளுக்கு ரூ. 4 கோடியே 82 லட்சத்து90 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்டங்கள் இன்று (12.01.2021) வழங்கப்படுகிறது.பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. பேர்ணாம்பட்டு புதிய பேருந்து நிலையம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம் ரூ. 3 கோடியே 6 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பிலும், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் ரூ.2கோடியே 12 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பிலும், கே.வி.குப்பம் வட்டாட்சியர் அலுவலகம் ரூ. 3 கோடியே 6 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பிலும் கட்டுமானப் பணிகள் நடைப்பெற்று வருகிறது.
மன்னர்கள், ராஜாக்கள் நாட்டை ஆண்ட காலத்தில் ஏரி, குளம், குட்டைகளை உருவாக்கி நிலத்தடி நீர் சேமிக்கப்பட்டது. காலப்போக்கில் ஏரி, குளம், குட்டைகள் பராமரிக்கப்படாமல் பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்தனர். இந்திய சுதந்திர வராலாற்றில் மாண்புமிகு தமிழக முதல்வர், குடிமராமத்து நாயகர் 2017 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித் துறை கட்டுபாட்டிலுள்ள ஏரி, குளம், குட்டைகள் தூர்வார ஆணையிட்டார்கள். அதன் விளைவாக இந்த ஆண்டு பெய்த பருவ மழையால் 70 சதவீத ஏரி, குளம், குட்டைகள்
முழுமையாக நிரம்பியுள்ளது. நீர் மேலாண்மை பணிகளுக்காக மத்திய அரசு வேலூர் மாவட்டத்திற்கு முதல் பரிசு வழங்கியுள்ளது.
நிகழ்ச்சிகளின் முடிவில் அமைச்சர் அனைத்து துறைகளின் சார்பில் நலத்திட்டங்களை வழங்கினார்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மகளிர் சுய உதவி குழுவினருக்கு அனுப்பியுள்ள புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து செய்தி மடலை மகளிர் குழுவினரிடம் வழங்கினார்.
செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியையும், அதி நவீன வீடியோ வாகனம் மூலம் அரசு திட்டங்கள், சாதனைகள் ஒளிபரப்பபடுவதை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் . மகேந்திர பிரதாப் தீக்சீத், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரவி, உதவி மகளிர் திட்ட அலுவலர் திருமேனி, கூட்டுறவு சங்க தலைவர் சீனிவாசன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பிரபாகரன், வட்டாட்சியர் . கோபி, தனி வட்டாட்சியர் பழனி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கனகராஜ், . சுதாகரன், துணை வட்டாட்சியர்கள் இளவடிவேல், சீனிவாசன், அரசு வழக்கறிஞர்கள் .கோவிந்தசாமி, . டில்லிபாபு, ,அருண், ஜெகன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் வருவாய்க் கோட்டாட்சியர் ஷேக் மன்சூர் நன்றி கூறினார்.
செய்தி வெளியீடு செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்.