ஒரு நிமிடத்தில் ஐம்பத்தி மூன்று வகையான கார் பெயர்களைக் கூறி சிறுவன் சாதனை…

Loading

ஒரு நிமிடத்தில் ஐம்பத்தி மூன்று வகையான கார் பெயர்களைக் கூறி சிறுவன் சாதனை

சென்னை பெரம்பூர் அடுத்த பெரவள்ளூர் அகரம் பகுதியை சேர்ந்தவர் சதக்கத்துல்லா ஷர்மிளா தம்பதியினர். இவர்களுக்கு நான்காம் வகுப்பு படிக்கும் முகமது ஹர்ஷத் என்ற மகனும், ஒன்றாம் வகுப்பு படிக்கும் நஸ்ரியா என்ற மகளும் உள்ளனர்.

கொளத்தூர் எவர்வின் பள்ளியில் படித்து வரும் முஹம்மது ஹர்ஷித் சிறுவயது முதல் கார் மீது மோகம் கொண்டு வந்துள்ளார். அதன்படி அவ்வப்போது டிவியிலும் பத்திரிகைகளிலும் புத்தகங்களிலும் இணையதளங்களிலும் கார் வகைகளை பார்த்து ரசித்து வந்துள்ளார். இவரின் ஆர்வத்தைக் கண்ட அவரது பெற்றோர் உலகில் உள்ள கார்களின் வகைகள் அதன் நிறுவனர், கார்களின் திறன் குறித்து எடுத்துரைத்துள்ளனர். அதை ஆர்வத்துடன் கேட்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் அவ்வப்போது அவரது பெற்றோர்கள் கார் குறித்து கேட்கும்போதெல்லாம் குறிப்பு இல்லாமல், எதையும் பார்க்காமல் அவற்றின் லோகோ நிறுவனம் குறித்து சொல்வதை கண்டு வியந்துள்ளனர். இதுகுறித்து சதகத்துல்லா ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் ஆலோசனைப்படி இன்று காலை எவரின் பள்ளியில் முகமது அர்சத் திறன் குறித்த ஆய்வு செய்யப்பட்டது.

இதில் ஒரு நிமிடத்திற்கு 53 கார் வகைகள், நிறுவனர் குறித்து அவர் கூறினார். அவரது திறனைப் பாராட்டி ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் பதக்கமும் சான்றிதழும் வழங்கப்பட்டது. விரைவில் தற்போது நிகழ்த்திய சாதனையை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக சிறுவனின் பெற்றோர் தெரிவித்தனர் இந்நிகழ்ச்சிகள் எவர்வின் பள்ளியின் முதல்வர் புருசோத்தமன் ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நடுவர் விவேக் நாயர் மற்றும் சிறுவனின் பயிற்சியாளரும் நாலேஜ் இன்ஜினியருமான ஷெரிபா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *