திருச்சி இபி ரோடில் உள்ள அந்தோணியார் கோவில் சமத்துவ பொங்கல்- விளையாட்டு விழா.
திருச்சி:
திருச்சி கீழப்புலிவார்டு ரோடில் உள்ள அந்தோணியார் கோவிலில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. அந்தோணியார் கோவில் நிர்வாகிகள், வானவில் இளைஞர் நற்பணி மன்றம், ஊர் பொதுமக்கள் சார்பில் இந்த விழா நடைபெற்றது.தலைவர் சகாயம் தலைமை வகித்தார். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கிறிஸ்துவ நல்லிணக்க இயக்க நிறுவனர் இனிகோ இருதயராஜ், தொழிலதிபர்கள் அப்துல் சமது, அலெக்ஸ் ராஜா, திமுக முன்னாள் கவுன்சிலர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி சிறப்புரையாற்றினர். விழாவில் சிறுவர் சிறுமியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவில் கிறிஸ்துவ நல்லிணக்க இயக்க மாவட்ட செயலாளர் புஷ்பராஜ், சங்க துணைத் தலைவர் ஜான் மேத்யூஸ், செயலாளர் அருள் நாயகம், துணைச் செயலாளர் ஜான்சன், பொருளாளர் சேவியர், துணைப் பொருளாளர் ஜஸ்டின், காரியதரிசி திருநாவுக்கரசு, துணை காரியதரிசி ஆரோக்கியதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழாவில் அந்தோணியார் கோவில் தெரு பொதுமக்கள், முக்கியஸ்தர்கள், பூண்டி மாதா அன்பியம் தெரு மக்கள், வானவில் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.