கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியாவுல்ஹக் இ.கா.ப அவர்கள் தலைமையில் கள்ளக்குறிச்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்த சமத்துவ பொங்கல் விழாவில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள் என அனைத்து சமுதாயனத்திரும் கலந்து கொண்டு பொங்கலோ பொங்கல் என பொங்கல் வைத்து கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சங்கர், துணை காவல் கண்காணிப்பாளர் திரு.இராமநாதன், கள்ளக்குறிச்சி ஆய்வாளர் திரு.இராஜதாமரைபாண்டியன், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி, காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தங்கள் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்து பொங்கல் விழாவில் பங்கேற்றனர்