அதிமுக மலைக்கோட்டைப் பகுதியில் எம்ஜிஆர் பிறந்த நாளில் அன்னதானம் வெல்லமண்டி ஜவஹர் வழங்கினார்.

Loading

திருச்சி:
எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி இ.பி. ரோட்டில் ஏழை எளிய மக்களுக்கு வெல்லமண்டி ஜவஹர் அன்னதானம் வழங்கினார்.
அதிமுக நிறுவனரும், மறைந்த முதலமைச்சருமான எம்ஜிஆர் 104 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. எம்ஜிஆர் பிறந்த நாளை அதிமுகவினர் சிறப்பாக கொண்டாடினர். இதை முன்னிட்டு எம்ஜிஆரின் திருஉருவ சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இனிப்புகள் வழங்கியும் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் அதிமுகவினர் கொண்டாடினர் மேலும் ஆங்காங்கே எம்ஜிஆரின் திருவுருவப்படம் அலங்கரிக்கப்பட்டு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த வகையில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மலைக்கோட்டை பகுதி சார்பில் கீழ புலிவார்டு ரோடில் அன்னதானம் வழங்கப்பட்டது.
அங்குள்ள முருகன் தியேட்டர் அருகே நடந்த அன்னதான விழாவை வெல்லமண்டி ஜவஹர் தொடங்கி வைத்தார். மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார்.
இதைத்தொடர்ந்து இபி ரோடு லாரி ஷெட்டில் உள்ள மாநகராட்சியின் வீடற்றோர் தங்கும் இல்லத்தில் உள்ள 65 முதியவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. மதிய உணவை வெல்லமண்டி ஜவஹர் வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட அவைத்தலைவர் மலைக்கோட்டை ஐயப்பன், இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் நவசக்தி சண்முகம், வட்டச் செயலாளர்கள் அகிலாண்டம், ராமநாதன், சிங்கமுத்து, ஜெயக்குமார், லயன் கார்த்திகேயன், மகளிர் அணி துணைச் செயலாளர் ஜெயஸ்ரீ, பகுதி பொருளாளர் தாமேஸ்வரன், கட்டில் பாறை பாபுஜி, செல்வகுமார், பொதுக்குழு உறுப்பினர் மல்லிகா செல்வராஜ், பாபா தியாகு, தொழில்நுட்ப பிரிவு பகுதி செயலாளர் கதிரவன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *