கொரோனா வைரஸ் தொற்று தடுப்பூசி போடும் திட்டத்தை ஆணையாளர் திரு.கோ.பிரகாஷ் அவர்கள் துவக்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா் அவர்களின் உத்தரவின்படி,
பெருநகர சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-196,
ஈஞ்சம்பாக்கம் நகர்ப்புற சமுதாய சுகாதார நல மையத்தில் முதற்கட்டமாக
சுகாதாரப் பணியாளாகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று தடுப்பூசி போடும்
திட்டத்தை ஆணையாளர் திரு.கோ.பிரகாஷ் அவர்கள்
துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தெற்கு வட்டார
துணை ஆணையாளர் டாக்டர் ஆல்பி ஜான் வாகீஷ் அவர்கள்,
மாநகர நல அலுவலர் டாக்டர் எம்.ஜெகதீசன், மாநகர மருத்துவ அலுவலர்
டாக்டர் ஹேமலதா, மண்டல அலுவலர் திரு.டி.சுகுமார் உட்பட பலர் கலந்து
கொண்டனா்.