சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் அவர்கள் பொங்கல் விழாவில் கலந்து கொண்டார்
சென்னை பெருநகர காவல்துறை சார்பாக சூளைமேடு கிழக்கு மற்றும் மேற்கு நமச்சிவாயபுரம் பகுதியில் பொங்கல் வைக்கும் வைபவமும் மகளிருக்கான கோலப்போட்டி மற்றும் சிறுவர் சிறுமியருக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்ற இவ்விழாவில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் அவர்கள்,R. தினகரன் காவல் கூடுதல் ஆணையாளர் அவர்கள்,R. சுதாகர் காவல் இணை ஆணையாளர் அவர்கள், R.கிருஷ்ணராஜ் காவல் துணை ஆணையாளர் அவர்கள்,S. முத்துவேல் பாண்டி உதவி ஆணையாளர் அவர்கள் நுங்கம்பாக்கம் சரகம். மற்றும் சூளைமேடு F 5 காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்த் பாபு அனைவரும் கலந்து கொண்டு நாட்டுப்புற கலை நிகழ்ச்சியில் பங்குபெற்ற திருநங்கைகளுக்கு 30 மூட்டை அரிசியும் கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சில்வர் குடம் அந்த பகுதியில் அனைத்து வீடுகளுக்கும் பொங்கல் பானை ஆகியவற்றை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் அவர்கள் வழங்கினார். இவர்களுடன் அய்யாசாமி, வாசுதேவன் .வெங்கட், சேகர் ,சிட்டிபாபு, திருநங்கை சுதா ஆகியோர் கலந்துகொண்டு பொங்கல் விழாவை சிறப்பித்தனர்.