வடலூர் காவல் நிலையத்தில் பொங்கல் கொண்டாட்டம்.
வடலூர் காவல் நிலையத்தில் பொங்கல் கொண்டாட்டம்
தை திருநாளாம் பொங்கல் திருநாள் தமிழகம் முழுவதும் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட வடலூர் L-1 காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் மஞ்சுளா அவர்களின் தலைமையிலான காவலர்கள் பாரம்பரிய உடையான வேட்டி சேலைகள் அணிந்து மண்பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர் ஜாதி, இனம், மதம் ஆகிய வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒன்று கூடி காவல்நிலைய வளாகத்தில் தை திருநாளாம் பொங்கல் திருநாளை வெகு விமர்சையாக ஒன்றுகூடி பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர் இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர், உதவி ஆய்வாளர் கமலஹாசன் மற்றும் போக்குவரத்து காவலர்கள் உடன் இருந்தனர்
செய்தியாளர்
தனுஷ்
குறிஞ்சிப்பாடி