பன்னாட்டு அரிமா சங்க நிறுவனர் மெல்வின் ஜோன்ஸ் அவர்களின் பிறந்தநாளையொட்டி ஏழை எளியவர்களின் பசியைப் போக்கும் விதமாக 5 வாகனங்கள் மூலம் 5000 பேருக்கு மாபெரும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி லயன் டாக்டர் வி.ராமமூர்த்தி,லயன் பி.முரளி தலைமையில் கிண்டி அரிமா சங்க பள்ளியில் நடைபெற்றது.
பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் மாவட்டம் 324-ஏ8 சார்பில் பன்னாட்டு அரிமா சங்க நிறுவனர் மெல்வின் ஜோன்ஸ் அவர்களின் பிறந்தநாளையொட்டி ஏழை எளியவர்களின் பசியைப் போக்கும் விதமாக 5 வாகனங்கள் மூலம் 5000 பேருக்கு மாபெரும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி லயன் டாக்டர் வி.ராமமூர்த்தி,லயன் பி.முரளி தலைமையில் கிண்டி அரிமா சங்க பள்ளியில் நடைபெற்றது.
இதில் லயன்ஸ் கிளப் மாவட்ட ஆளுநர் லயன் வி.ரமேஷ்பாபு,உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ்,தமிழ்நாடு மனித உரிமை தலைவர் எஸ்.பாஸ்கரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.நிகழ்ச்சியில் லயன் ராஜா சீனிவாசன்,லயன் கே.ஜி.அனில்குமார்,லயன் டாக்டர் ஜி.மணிலால்,கிண்டி லயன்ஸ் கிளப் பள்ளியின் தாளாளர் லயன் ஜெயக்குமார் அரிமா லயன் எம்.எம்.கோவிந்த், லயன் ஜி.துரைராஜ், லயன் கே.சாந்தகுமாரி, கே.ஆர் ஜெயக்குமார்,லயன்டி.சிவக்குமார்,உட்படஏராளமான அரிமா சங்க நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.