தேனி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் அம்மா மினி கிளினிக் துணை முதல்வர் திறந்து வைத்தார்.
தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் மருத்துவ வசதி இல்லாத இடங்களில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திட்டம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் துவங்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அம்மா மினி கிளினிக் திட்டத்தை முதல் கட்டமாக டிசம்பர் 17ஆம் தேதி போடி ஊராட்சி ஒன்றிய எட்டு இடங்களில் தொடங்கி வைத்தார். இரண்டாம் கட்டமாக பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய எட்டு இடங்களில் தொடங்கி வைத்தார். மூன்றாம் கட்டமாக தற்போது தேனி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சீலையம்பட்டி,தர்மாபுரி, குப்பிநாயக்கன்பட்டி, வெங்கடாசலபுரம், தாடிச்சேரி, அரண்மனை புதூர், ஆகிய 6 இடங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி கிராமப்புற மக்களுக்கு சிகிச்சை வழங்குவதை பார்வையிட்டு தொடங்கி வைத்துள்ளார். அதன்பின் கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறுகால ஊட்டச்சத்துக் பொருட்கள் அடங்கிய பொட்டலங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆட்சியர் பள்ளவி பல்தேவ் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ் டி கே ஜக்கையன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.