தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு சார்பாக 12.1.2021.அன்று சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு சார்பாக 12.1.2021.அன்று சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
சமத்துவ பொங்கல் விழாவினை
மாவட்டத் தலைவர் அ.பிரான்சிஸ் தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைக்க, மாவட்ட செயலாளர் M.மார்க் மகேஷ் முன்னிலை வகிக்க, மாவட்ட பொருளாளர் N.முத்துமாரியப்பன் வரவேற்புரை ஆற்றிட பொங்கல் விழா நிகழ்ச்சி இனிதே துவங்கியது, இந்த சமத்துவ பொங்கலை ஸ்ரீபாகம்பிரியாள் அம்பிகா சமேத சங்கரராமேஸ்வரர் ஆலய பிரதான அர்ச்சகர் R.கல்யாண சுந்தர சிவாச்சாரியார் (எ) செல்வம் பட்டர் துவங்கி வைக்க, லயன்ஸ் டவுன் சகாய மாதா ஆலய பங்கு தந்தை அருட்திரு ஜோ.சகாய லூட்ரின், பல்லுயிர் வாழ்வியல் மைய இயக்குனர் திரு. வான.துரை ஆகியோர் சமத்துவ பொங்கலை அனைவருக்கும் வழங்கிட, கொரேனா பேரிடர் காலத்தில் சிறப்பாக பணிசெய்த தூய்மை பணியாளர் களுக்கு பத்திரிகையாளர் கூட்டமைப்பு சார்பில் புத்தாடை களையும், நற்சான்றிதழ்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார், மாநகராட்சி ஆணையாளர் திரு. VP.ஜெயசீலன் இ.ஆ.ப, மற்றும் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.B.கணேஷ், விளாத்திகுளம் உட்கோட்ட நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு.R.பிரகாஷ், உள்ளிட்டோர் வழங்கிட. தமிழர் பாரம்பரிய கலையான சிலம்பம் ஆட்டத்தை ஒடூஸ் போர்ட்ஸ் அகடாமி மாணவர்கள் லோகநாத். மகேஸ்வரன் , மணிவண்ணன். ஸ்ரீதர்ராஜ் ஆகியோர் சிறப்பாக விளையாடிட சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடை பெற்றது. மேலும் விழாவினில் தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை & தொலைகாட்சி கூட்டமைப்பு நிர்வாகிகளான துணைச் செயலாளர் CN.அண்ணாதுரை, செயற்குழு உறுப்பினர்கள் ஆரோக்கிய சாமி, சாம்ராஜ், முத்துக்குமார், மார்கின் ராபர்ட், சொக்கலிங்கம், தெர்மல் ராஜா. பாலசுப்ரமணியன், நீம் டிவி லூயிஸ், நீம் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஈஸ்வரி உட்பட கூட்டமைப்பு நிர்வாகிகள் பலரும் கலந்து கெண்டார்கள் விழா நிறைவில் துணைச் செயலாளர் CN.அண்ணாதுரை நன்றியுரை வழங்கினார்.