பொங்கல் பரிசு தொகுப்பு பெற்ற பெண்கள் தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றி…
பெண்களின் முன்னேற்றமே சமுதாயத்தின் முன்னேற்றம் என்பதை கருத்தில்
கொண்டு தமிழக அரசால் பெண்களுக்கான பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு
சிறப்பான முறையில் செயல்படூத்தப்பட்டு வருகிறது. பெண்களின் பாதுகாப்பையும்,
வாழ்வாதாரத்தையும், மேம்படுத்தும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்களால் பல்வேறு திட்டங்கள் செயல்படூத்தப்பட்டு வருகிறார்.
கமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளையொட்டி அனைத்து அரிசி
குடும்ப அட்டை தாரர்களின் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் தலா ரூ.2500
ரூபாய் ரொக்கத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம்
முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் ஒரு முழு நீள
கரும்பு ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம்
மற்றும் 1 கோடியே 80 லட்சம் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும்
திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 21.12.2020 அன்று
துவக்கி வைத்தார்கள்.
தமிழர்களின் திருநாளாம் தைப் பொங்கலை சிறப்பாகக் கொண்டாட வேண்டும்
என்பதற்காக ஓவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு அறிவித்து
வழங்கி வருகிறது. இந்த ஆண்டை பொறுத்தவரை, கொரோனா வைரஸ் தொற்று
பரவல் ஏற்பட்டு பலருக்கு வேலைவாய்ப்பு இல்லாத சூழ்நிலை, டெல்டா
பகுதிகளிலே புயலினால் கடுமையான மழை, அங்கே தொழிலாளர்கள் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஓட்டுமொத்தமாக தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால்
வேலை இழந்திருக்கின்ற சூழ்நிலை, புயலால், கன மழையால் தொழிலாளர்கள்
வேலை இழந்திருக்கின்ற சூழ்நிலை ஆகிய இரண்டும் இந்த ஆண்டை
பாதித்திருக்கிறது.
இதையெல்லாம் அரசு கருத்தில் கொண்டு தைப் பொங்கலை தமிழ்நாட்டில்
இருக்கின்ற அத்தனை தமிழர்களும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக
தமிழகத்தில் உள்ள 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு
ஓவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூபாய் 2500/- மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு
கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம்
முந்திரி, 5 கிராம் ஏலக்காய், ஒரு நல்ல துணிப்பை ஆகியவை கொடுக்கப்படும்
என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.
இத்திட்டதிற்காக தமிழ்நாடு அரசு ரூபாய் 5,604.84 கோடி நிதி ஒதுக்கீடு
செயயப்பட்டுள்ளது.
கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு
வழங்குவதற்காகவும், அதன்மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடவும்,
1983-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் மாண்புமிகு புரட்சித் தலைவர்
டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களால் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம்
தொடங்கப்பட்டது. இதன்படி, ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளான பொங்கல்
திருநாளையொட்டி விலையில்லா வேட்டிகள் மற்றும் சேலைகள் வழங்கப்பட்டு
வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதோடுூ
மட்டுமல்லாமல், கைத்தறி விசைத்தறி தொழில்களில் ஈடூபட்டூள்ளோருக்கும்
வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2021-ஆம் ஆண்டு 484
கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் 1] கோடியே 80 லட்சம் வேட்டிகள் மற்றும்
சேலைகள் வழங்கிடும் திட்டத்தையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள் 21.12.2020 அன்று துவக்கி வைத்தார்கள்.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திற்கு 6,40,035 குடும்ப அட்டைதாரா்களுக்கு
ரூ.160 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில்
நியாயவிலைக் கடைகள் மூலம் மொத்தம் 6,40,035 அரிசி குடும்ப
அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்க குடூம்ப
அட்டைதாராகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, முற்பகல் 100 குடும்ப
அட்டைதாரர்களுக்கும், பிற்பகல் 100 குடும்ப அட்டைதாராகளுக்கு தலா ரூ.2,500/-
மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.