நாகர்கோவிலில் அகில பாரத இந்து மகா சபா விவசாய அணி சார்பில் பொங்கல் விழா குமரி மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அகில பாரத இந்து மகா சபா விவசாய அணி சார்பில் பொங்கல் விழா குமரி மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் இந்து மகா சபா மாநில தலைவர் த.பாலசுப்பிரமணியன் முன்னிலையில் விவசாய அணி மாநில தலைவர் மாணிக்கம், குமரி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர். இந்து மகா சபா சார்பில் மாநில தலைவர் த.பாலசுப்பிரமணியன் அப்பகுதி மக்களுக்கு பொங்கல் பொருள்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.