தலைவாசல் அருகே நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தலைவாசல் அருகே வரகூர் கிராமத்தில் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு முதல் முறையாக பொங்கல் பரிசு தொகுப்பு மாநில மத்திய கூட்டுறவு தலைவர் , மாவட்ட பேரவை செயலாளர் ஆர். இளங்கோவன் அவர்களின் வழிகாட்டுதல்படி தலைவாசல் வடக்கு ஒன்றிய கழக செயலாளர், தலைவாசல் ஒன்றிய பெருந்தலைவர் க.ராமசாமி அவர்களின் ஆலோசனைப்படி கட்டுமான தொழிலாளர்கள் வேட்டி, சேலை , அரிசி ஒரு கிலோ, பாசிபருப்பு ஒரு கிலோ, வெல்லம் ஒரு கிலோ , சமையல் எண்ணெய் அரை லிட்டர் ,முந்திரி , திராட்சை , நெய் ஆகிய அடங்கிய பொங்கல் தொகுப்பை தொழிலாளர்களுக்கு வழங்கினர் இதில் அண்ணா கட்டுமான தொழிற்சங்க பிரிவு வரகூர் ஊராட்சி மன்ற தலைவர் அ R.ராமசாமி அவர்கள் ,பெரியேரி ஊராட்சி மன்ற தலைவர் சேகர் அவர்கள் , கட்டுமான பிரிவு அலுவலர் கலந்து கொண்டனர்.