கல்லூரி வளாக தூதுவர்களான மாணவர்களுடன் ஆன்லைன் காணொளி மூலம் ஆலோசனை கூட்டம்…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக கூட்டரங்கில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது தொடர்பாக மாவட்டத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் (மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக், வேளாண்மை), நியமிக்கப்பட்டுள்ள கல்லூரி வளாக தூதுவர்களுடன்,(CollegsCampusAmbassadors) ஆன்லைன் காணொளி, (GoogleMeet) மூலம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்,பொ, இரத்தினசாமி, வருவாய் கோட்ட அலுவலர்கள்,(திருவண்ணாமலை) ஸ்ரீதேவி, (ஆரணி) ஜெயராமன், (செய்யார்) விமலா, மற்றும் அனைத்து வட்டாட்சியர்கள் தேர்தல் பிரிவு அலுவலர்கள் மாவட்டத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் கலந்து கொண்டனர்,
மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கல்லூரி வளாக தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ள மாணவர்களிடம்தங்கள் கல்லூரியில் பயிலும் 18 வயது பூர்த்தியான தகுதியுள்ள அனைத்து மாணவர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது, மேலும்.வாக்காளர் பட்டியலில் ஆன்லைன் இணையதளம் மூலமாக வும் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலர்கள், வட்டாட்சியர் கள் மூலமாகவும், சேர்ப்பதற்கான முறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது, மற்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில் வாக்காளர் பட்டியலில், 18 வயது பூர்த்தியான அனைத்து தகுதி வாய்ந்த இளம் வாக்காளர்கள் தங்கள் பெயர்களை சேர்ப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும், மேலும் இப்பணிகளில் சிறப்பாக பங்கேற்று செயல்படும் கல்லூரி வளாக தூதுவர்களுக்கு ஸ்மார்ட் கைப்பேசி பரிசாக வழங்கப்படும் என்றார்,