தி.மு.க., தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினை கண்டித்து அ.தி.மு.க., சாலை மறியல்..

Loading

மதுரை,
முதல்வரை தரக்குறைவாக பேசும் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து மதுரையில் அ.தி.மு.க, சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில், அ.தி.மு.க., சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பெண்களை தொடர்ந்து தரம் தாழ்ந்து பேசி வரும் தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,

அ.தி.மு.க.,வின் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பெண்கள் உட்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்,

இதனால் மதுரை – ஒத்தக்கடை சாலையில் சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த ரோட்டில் போக்குவரத்து தடை செய்து நான்குவழிச்சாலை வழியாக ஒத்தக்கடை காவல்துறையினர் மாற்றம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ராஜன்செல்லப்பா பேசியதாவது:
கருணாநிதி குடும்பத்தினருக்கே உரிய பண்பாடு இது, அதில் இருந்து வந்தவர்களிடம் பெண்களுக்கான மரியாதையை எதிர்பார்க்க முடியாது.

பெண்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாக மகளிர் காவல்நிலையம், தாலிக்கு தங்கம், பேருந்து நிலையத்தில் தாய்மார் பெண்களுக்கான தனியறை உள்ளிட்டவற்றை வழங்கியது அதிமுக அரசு.
நடிகர் என்ற போர்வையில் வந்த உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பேசி வருகின்றார்.

தி.மு.க..வில் முன்னாள் அமைச்சர் ராஜா உள்ளிட்ட 13 பேர் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது.
காற்றில் ஊழல் செய்தவர்கள் திமுகவினர் .

இந்த ஆட்சியில் தான் 40 வருடங்களுக்கு பிறகு மீனாட்சியம்மன் கோவில் தெப்பக்குளம் நிரம்பி உள்ளது.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பல்வேறு இடங்களில் பேசிவிட்டு, மதுரைக்கு வர உள்ளார்,
மதுரையில், திமுக

திமுகவை மக்கள் புறக்கணிக்க தொடங்கி உள்ளனர். இவர்களை தொடர்ந்து அனுமதித்தால் தமிழகத்தின் மரியாதை இல்லாமல் போய்விடும் என்றார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *