5 முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகளை உடனடியாக திறக்க வேண்டும் தமிழக ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல் .

Loading

திருச்சி:
ராஜஸ்தான் மாநிலத்தை போல் தமிழகத்தில் 5 முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளிகளை உடனடியாக திறக்க வேண்டும் என்று என்று தமிழக ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ளது.
தமிழக ஆசிரியர் கூட்டணியின் சிறப்பு தேர்தல் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
சங்கத்தின் மூத்த தலைவர் அண்ணாமலை
தலைமை வகித்தார்.
இதில் 34 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ராஜஸ்தான் மாநிலத்தை போல் ஐந்தாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். ஆன்லைன் கல்வி என்பது புட்டிப்பால் மூலம் பிள்ளைகளை வளர்ப்பது போன்றதாகும். பள்ளியில் கல்வி என்பது தாய்ப்பால் மூலம் குழந்தைகளை வளர்ப்பதற்கு சமமாகும்.
கல்வி அமைச்சர் ஒரு நாளில் மூன்று விதமான வித்தியாசமான அறிக்கைகளை வெளியிடுகிறார். ஒரு தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும். ஆசிரியா, அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள், வேலையில்லா இளைஞர்களுக்கு எதிரான ஒரு அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து வேண்டும்.
இந்தியாவிலேயே அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும்
நலத் திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டு பழிவாங்கும் போக்கை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பொருட்களை பள்ளிகள் நேரடியாக கொள்முதல் செய்ய முடியவில்லை . பள்ளிகளிடம் வவுச்சர் மட்டுமே கேட்டுப் பெறுகிறார்கள். உதாரணமாக பத்தாயிரம் ரூபாய்க்கு வவுச்சர் பெற்றால் 2,500 ரூபாய் மதிப்புள்ள உபகரணங்கள் தான் பள்ளிகளுக்கு வருகிறது. இவ்வாறு பள்ளிக்கல்வித்துறையில் பெரிய அளவில் ஊழல் நடைபெறுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி எதிர்ப்பு மட்டுமல்ல ஆசிரியர், அரசு ஊழியர்களின் எதிர்ப்பும் தான் பிரதிபலித்தது.
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதலமைச்சர் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் இல்லையென்றால் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் பள்ளி கல்வித் துறையில் நடைபெறும் ஊழல்களை பொதுமக்களிடம் அம்பலப்படுத்துவோம்

இவ்வாறு அவர் கூறினார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *