சேலம் தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கம், கைவினைஞர்கள் தொழிற்சங்க பேரவை, கைவினைஞர்கள் முன்னேற்ற கழகம் இணைந்து ஏ. எம்.ஆர்.ஹோட்டலில் முப்பெரும் விழா நடைபெற்றது.
சேலம் தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கம், கைவினைஞர்கள் தொழிற்சங்க பேரவை, கைவினைஞர்கள் முன்னேற்ற கழகம் இணைந்து ஏ. எம்.ஆர்.ஹோட்டலில் முப்பெரும் விழா நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சேலம் மாவட்ட தலைவர் குரு ராமலிங்கம் தலைமை தாங்கி நடத்தினார். மாவட்ட செயலாளர் தேவா என்கிற தேவராஜ் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் ஆர் எம் சண்முகநாதன் கலந்து கொண்டு ஏழை, எளிய மக்கள் 20 பேருக்கு தையல் மிஷின் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கி, நலத்திட்ட உதவிகள் செய்தார். இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் சீனிவாசன், ஏக நரேந்திரன், தனுஷ்கோடி, சண்முகம், செல்வராஜ், மாநில மகளிர் அணி செயலாளர் உமாராணி, மற்றும் மேற்கு மண்டல தலைவர் வெள்ளியங்கிரி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஏ ஆர் ராஜேந்திரன், மணிகண்டன், மாதவ அங்குராஜ், சக்கரபாணி ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். மாவட்ட செயலாளர் தேவராஜ் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இறுதியில் மாநில தலைவர் நிர்வாகிகளை அறிமுகம் செய்துவைத்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.