அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு முகூர்த்தக்கால் நடும் விழா.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வரும் 16ஆம் தேதி உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு விழா நடக்கிறது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை ஜல்லிக்கட்டு விழா குழுவினர் தீவிரமாக செய்து வருகின்றனர். இதனால் அலங்காநல்லூர் விழா கோலம் பூண்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பேரூராட்சி அலுவலகத்தில் ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து வருவாய்த்துறை. காவல்துறை. பேரூராட்சிகள் துறை. ஊராட்சி ஒன்றிய நிர்வாகம். மக்கள் நல்வாழ்வு துறை. பொதுப்பணித் துறை. பொது சுகாதாரத்துறை. கால்நடை துறை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து ஆலோசனை கூட்டம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் சோழவந்தான் எம்.எல்.ஏ., மாணிக்கம், கலெக்டர் அன்பழகன், எஸ்.பி., சுஜித்குமார், வருவாய் கோட்டாட்சியர் முருகானந்தம், மாவட்ட வருவாய் அதிகாரி செந்தில்குமாரி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சேதுராமன், தாசில்தார் பழனிகுமார், பேரூராட்சி செயல் அலுவலர் சின்னசாமி பாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமா ராஜன், ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் நகர செயலாளர் அழகுராஜா, முன்னாள் சர்க்கரை ஆலை தலைவர் ராம்குமார், கூட்டுறவு தலைவர் பாலாஜி, நாட்டாமை சுந்தர் உள்ளிட்ட ஜல்லிக்கட்டு விழா குழுவினர் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: தமிழக முதல்வர் சார்பில் சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு காரும், துணை முதலமைச்சர் சார்பில் சிறந்த காளைக்கு ஒரு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு மிகவும் வித்தியாசமானது. நோய் தொற்று காலத்தில் எவ்வாறு விழா நடத்துவது குறித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில்; 800 காளைகள் வரை களத்தில் இறக்க முடிவு செய்துள்ளோம். மதியம் 3 மணி வரை நடத்த திட்டமிட்டுள்ளோம். விழாக்குழுவினர் 4 மணி வரை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சூழ்நிலைக்கு ஏற்ற வாறு மாற்றி அமைக்கப்படும். மாடுபிடி வீரர்கள், உரிமையாளர், உதவியாளர் என அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும். சானிடைசர் மூலம் கையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு 15 நிமிடத் திற்கு ஒருமுறை ஒலிபெருக்கி மூலம் சமூக இடைவெளி கடைபிடிப்பதின் அவசியம் பற்றி விளக்கி கூறப்படும். வாடிவாசல் முதல் காலரி வரை பரிசோதனை செய்யும் இடம் வரை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். ஆங்காங்கே குடிநீர் தொட்டி, உணவு, அனைத்து இடங்களிலும் மின் விளக்குகள் பொருத்தப்படும் என்றார்.