ரூ.78.000. மதிப்பிலான மின்கலத்தால் இயங்கும் சக்கர நாற்காலி கலெக்டர் வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது தங்கை சத்யாவின் கல்லூரி இறுதி ஆண்டு கல்வி கட்டணம் செலுத்த உதவி கேட்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரின் கைபேசிக்கு வாட்ஸ் அப்பில். ஐயா வணக்கம் நான் ஒரு மாற்றுத்திறனாளி எனது பெயர் ஜெகநாதன். சேத்பட் வட்டம் ஆவியாந் தாங்கள் கிராமத்தை சேர்ந்த என் தங்கை சத்யா கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கிறார் ஒரு என்னால்கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலை கல்லூரிப் படிப்பு தொடர தாங்கள் என் தங்கைக்கு படிப்புக்கு உதவி செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என கோரிக்கை அனுப்பி வைத்தார். பின்னர் முதுகு தண்டுவடம் பாதித்து அடுத்தவர் உதவியுடன் வாழ்ந்து வரும் ஏழை மாற்றுத்திறனாளி ஜனநாதனுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு கலெக்டர் சந்தீப் நந்தூரி. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக ரூ.78.000/.ம். மதிப்பிலான மின்கலத்தில் இயங்கும் சக்கர நாற்காலி மற்றும் மாணவி சத்யாவின் கல்விக் கட்டணம். ரூ.31.000/.க்கான. காசோலை வழங்கினார். மேலும் சேத்பட் வட்டம் மேலானூர்ஊராட்சி ஆவியந் தாங்கள் கிராமத்தில் ஏழை நெசவுத் தொழிலாளி சம்பத், மற்றும் பார்வதி, ஆகியோரின் முதுகு தண்டுவடம் பாதித்த மாற்றுத்திறனாளிகளி மகன் ஜெகநாதன் வசித்து வருகிறார், ஜெகன் நாதனுக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர் ஒருவருக்கு திருமணம் முடிந்து விட்டது. தங்கை சத்யா தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு. பி .பி.எ. படித்து வருகிறார் . சரண்யா 9ம் வகுப்பு படித்து வருகிறார். இக்குடும்பத்தினர் அரசின் தொகுப்பு வீட்டில் வசித்து வருகிறார்கள். நிலம் எதுவும் இவர்களுக்கு கிடையாது. ஜகன் நாதனுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக. வழங்கப்படும். மற்றும் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஜெகநாதன் கூறியதாவது. தங்கையின் கல்விக்கட்டணம் செலுத்த உதவி கேட்டு வந்த தனக்கு இன்ப அதிர்ச்சியாக சிறப்பு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது. இதனால் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்குமனமார்ந்த நன்றிகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.