மத்திய மாநில அரசு பணியாளர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்துதல் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கு.இராசாமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மத்திய, மாநில அரசு, உள்ளாட்சி துறையினை சார்ந்த பணியாளர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்துதல் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கு.இராசாமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்வலோசனை கூட்டத்தல் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இராமதுரைமுருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்)(பொ) திரு.முத்துராமலிங்கம், வட்டாட்சியர்(தேர்தல்) திரு.சுந்தர்ராமன், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.