திருவண்ணாமலை மத்திய நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற covid-19 தடுப்பூசி சிறப்பு முகாம் ஒத்திகை…

Loading

திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் திருவண்ணாமலை மத்திய நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் 8,1 ,2021 பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக நடைபெற்ற covid-19 தடுப்பூசி சிறப்பு முகாம் ஒத்திகையை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் ஆய்வின்போது திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர். மரு. கே . திருமான் பாபு, மரு ஷகில் அகமது, இணை இயக்குனர் நலப்பணிகள் மரு கண்ணகி, துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் மரு அஜித்தா, மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், உடன் இருந்தனர், மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் covid-19 தடுப்பூசி சிறப்பு முகாம் ஒத்திகை காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது, தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி 2,ம் தேதி 5 மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஒத்திகை, இன்று அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது, இதில் தடுப்பூசி போட வருபவரின் உடல் வெப்பம் ,இரத்த அழுத்தம் பரிசோதனை, கணினியில் ஆன்லைன் பதிவு செய்தல் ,தடுப்பூசி போடுதல், மற்றும் கண்காணித்தல் ஆகியவை குறித்த ஒத்திகை நடைபெற்றது, திருவண்ணாமலை மாவட்டத்தில். திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை. போளூர் அரசு மருத்துவமனை. செய்யார் அரசு தலைமை மருத்துவமனை. திருவண்ணாமலை மத்திய நகர ஆரம்ப சுகாதார நிலையம். ஆரணி நகர ஆரம்ப சுகாதார நிலையம். காட்டாம் பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம். நாவல்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம். பெருங்கட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம். அத்தியந்தல் இரமண மகரிஷி இரங்கம்மாள் மருத்துவமனை ஆகிய.9 மருத்துவமனைகளில் நடைபெற்றது. அரசு மூலம் தடுப்பூசி வந்தவுடன் அவை குளிர்சாதன இருப்பு பெட்டியில் வைக்கப்பட்டு தடுப்பூசி போடப்படும் திருவண்ணாமலை மாவட்டத்தில் covid-19 தடுப்பூசி முதல் கட்டமாக மருத்துவ பணியாளர்களுக்கு போடப்பட்டுள்ளது இதற்கான விவரங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் பதிவுவெற்றம் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது என்றார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *