ஒட்டன்சத்திரம் அருகே பழனி பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதி விபத்து
ஒட்டன்சத்திரம் அருகே பழனி பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதி விபத்து மூவர் பலி.
திண்டுக்கல் ஒட்டன்சத்திரம்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை சாலைப்புதூர் என்ற இடத்தில் அதிகாலையில் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்த கூட்டத்தில் புவனேஸ்வரன் என்பவர் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பாதயாத்திரை பக்தர்கள் மீது கார் மோதியதில்
மதுரை மேலஅனுப்பானடியை சேர்ந்த அடைக்கலராஜ்(27), மீனாட்சிபுரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி கேசவன்(17) ஆகிய இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.
இச்சம்பவம்அறிந்த ஒட்டன்சத்திரம் காவல் துறையினர் உயிர் இழந்த நபர்களை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த இரண்டு நபர்கள் ஒட்டன்சந்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்ட நிலையில் அதில் அழகர்(45) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேற்படி சம்பவம் குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.