கனமழையினால் ஏற்ப்பட்ட பல்வேறு பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Loading

ஸ்ரீமுஷ்ணம் மேலபாளையம் ஊராட்சியில் பொதுபணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய ஓடையில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஓடை சேதமடைந்துள்ளதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பகுதி மக்கள் மழைக்காலங்களில் விவசாய மற்றும் பல்வேறு பணிகளுக்கு ஓடையை கடந்து செல்ல பாலம் அமைத்து கொடுக்கும்படி கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினரிடம் பாலம் அமைக்க சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டார்.

0Shares

Leave a Reply