உடல்நலக் குறைவால் இறந்த தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு அவரது பேட்ச் காவலர்கள் ஒருங்கிணைந்து சேகரித்த உதவி பணம் ரூ.12,76,400/- தொகையை வழங்கினார்

Loading

சென்னை பெருநகர காவல், நவீன கட்டுப்பாட்டறையில் பணிபுரிந்து வந்த தலைமைக் காவலர் (த.கா.18354) திரு.P.செந்தில்குமார், வ/45 என்பவர் கடந்த ஆகஸ்டு மாதம் பணியிலிருந்தபோது, திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, மருத்துவர் ஆலோசனைப்படி வீட்டிலிருந்தபடியே தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், 15.10.2020 அன்று மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி, 16.10.2020 அன்று இறந்தார். இவருக்கு சுனிதா என்ற மனைவியும், ப்ரிஷா, வ/18 (கல்லூரி 2ம் ஆண்டு) மற்றும் திரிஷா, வ/12 (8ம் வகுப்பு) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.
செந்தில்குமார் 1997ம் ஆண்டு (2வது பேட்ச்) தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்தவர் ஆவார். இவர் ஏற்கனவே 3 மருத்துவமனைகளில் சிகிச்சைக்க சுமார் 4.5 லட்சம் செலவு செய்துள்ள நிலையில், அவருடன் பணிக்கு சேர்ந்த 1997ம் ஆண்டு 2வது பேட்ச் காவலர்கள் (தற்போது தலைமைக் காவலர்கள்) தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்து இறந்த செந்தில்குமாரின் குடும்பத்துக்கு உதவ முன் வந்தனர்.
அதன்பேரில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 1997ம் ஆண்டு 2வது பேட்ச் காவலர்கள் சுமார் 2,460 நபர்கள் ஒருங்கிணைந்து செந்தில்குமாரின் குடும்பத்திற்கு உதவுவதற்காக பணம் ரூ.12,76,400/- (ரூபாய் பன்னிரண்டு லட்சத்து எழுபத்தாராயிரத்து நானூறு மட்டும்) வசூல் செய்தனர்.
மேற்படி தலைமைக் காவலர்கள் கேட்டுக் கொண்டதின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் காவலர்கள் வசூலித்த பணம் ரூ.12,76,400/- க்கான காசோலையை, இறந்த தலைமைக் காவலர் செந்தில்குமாரின் மனைவி சுனிதாவிடம் வழங்கினார். சுனிதா மற்றும் அவரது மகள்கள் காசோலையை நெகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு காவல்துறை மற்றும் 1997ம் ஆண்டு பேட்ச் காவல் குழுவினருக்கு நன்றி கூறினர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *