சாலையைசீரமைக்க வேண்டி எத்திராஜ் மக்கள் நல்வாழ்வு அமைப்பினர் கோரிக்கை.

Loading

எத்திராஜ் நகர் மக்கள் நலவாழ்வு சங்கம்.சார்பில் கடந்த 3ஆம் தேதி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு தலைவர் கோபால் தலைமை தாங்கினார் பின்னர் முக்கிய பிரச்சனையாக பலரும் எடுத்துரைத்தது.ராகவன் காலனி கிழக்குசாலை அமைப்பதற்காக கடந்த ஒரு வருடமாக சாலை சீரமைப்பு பணி தொடங்கப்பட்டு எந்த ஒரு வேலையும் நடைபெறாமல் குண்டும் குழியுமாக உள்ளது.பலரும் இரவு நேரங்களில் வாகனத்தை ஓட்டிச் செல்ல முடியாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.இதனைத் தொடர்ந்து சங்க நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அஞ்சல் மூலம் அனுப்பி உள்ளதாக தெரிவித்தனர் எனவே நெடுஞ்சாலை துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மக்கள் நலன் காக்கும் வகையில் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் கூட்டத்தில் வழக்கறிஞர் கங்காதரன்.கிருஷ்ணமூர்த்தி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *