சம்பா நெல் கொள்முதல் செய்ய 89 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு கடலூர் மாவட்ட ஆட்சிதலைவர் அறிவிப்பு:

Loading

நடப்பு சம்பா பருவத்தில் கடலூர் மாவட்டத்தில் ஏறத்தாழ தொண்ணூற்று ஓராயிரம் எக்டரில் நெல் சாகுபடி செய்து தற்போது அறுவடை துவங்கி உள்ள நிலையில் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று 2020-21 கொள்முதல் பருவத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக 10 இடங்களில் முதல் கட்டமாகவும், 79 இடங்களில் இரண்டாம் கட்டமாகவும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்; திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் தற்போது புவனகிரி வட்டத்தில் 10 கிராமங்களிலும்;;, ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் 23 கிராமங்களிலும்;;, பண்ருட்டி வட்டத்தில் 1 கிராமத்திலும், வேப்பூர் வட்டத்தில் 5 கிராமங்களிலும், காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் 18 கிராமங்களிலும், திட்டக்குடி மற்றும் விருத்தாசலம் வட்டங்களில் தலா 16 கிராமங்களிலும் ஆக மொத்தம் 89 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளன. நடப்பு கொள்முதல் பருவத்திற்கு மத்திய அரசு சன்னரகத்திற்கு அறிவித்த குறைந்த பட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.1888ஃ-உடன் தமிழக அரசு போனஸ் தொகையாக ரூ. 70-ஐயும் சேர்த்து மொத்தம் ரூ.1958ஃ- விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதே போன்று மத்திய அரசு சாதாரண ரகத்திற்கு அறிவித்த குறைந்த பட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.1868ஃ-உடன் தமிழக அரசு போனஸ் தொகையாக ரூ.50-ஐயும் சேர்த்து மொத்தம் ரூ.1918ஃ- விவசாயிகளுக்கு வழங்கப்படும். எனவே, சம்பா நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்களது விளை பொருட்களை அருகிலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்று பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *