ஊரக வளர்ச்சி குளங்களில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்திட மாவட்ட திட்டசெயலாக்க குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்திரு.சந்திரசேகர் சாகமூரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 41 ஊரக வளர்ச்சி குளங்களில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்வது தொடர்பாக மாவட்ட திட்டசெயலாக்க குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
2020-2021-ம் ஆண்டு தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊரக குளங்களில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில 25 ஹெக்டர் பரப்பளவில் 1,25,000ஃ- மீன் குஞ்சுகள் இருப்பு செய்திட மீன் துறை இயக்குநர் அவர்களால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி இத்திட்டத்தினை செயல்படுத்திட மாவட்ட திட்ட செயலாக்க குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களும் பயன்பெறும் வகையில் 41 ஊரக வளர்ச்சி குளங்கள் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர் அவர்களால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை ஒருவார காலத்திற்குள் தொடங்கிட மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை துணை இயக்குநர் திரு.காத்தவராயன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்); திரு.கண்ணன், மீன்வளத்துறை உதவி இயக்குநர் திரு.சின்னகுப்பன், உடையார்குடி மீன்வள கூட்டுறவு சங்க தலைவர் திரு.பாலு.பச்சையப்பன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
————————————————————————————————————
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், கடலூர்.