வருவாய்த்துறை வாயிலாக நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் குறித்து நடைபெற்று வரும் பணிகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த், இ.ஆ.ப., அவர்கள், பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த், இ.ஆ.ப., அவர்கள், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாட்டர் டேங் ரோடு;,பைப்புவிளை, செல்லங்கன் தெரு, கிருஷ்ணன்கோவில் மற்றும் அம்பேத்கர்காலனி, கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி, தோவாளை வட்டத்திற்குட்பட்ட கீழத்தெரு உள்ளிட்ட பகுதிகளிலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றுவருவதை,நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்.