சென்னை கிண்டியில் உள்ள சிறகுகள் அனைத்து ஓட்டுனர்கள் தலைமை அலுவலகத்தில் மாநில சங்க தலைவர் சபரிநாதன் செய்தியாளர்களை சந்தித்தார்.

Loading

சென்னை கிண்டியில் உள்ள சிறகுகள் அனைத்து ஓட்டுனர்கள் தலைமை அலுவலகத்தில் மாநில சங்க தலைவர் சபரிநாதன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்

தமிழக அரசு தொடர்ந்து ஓட்டுநர்களின் கோரிக்கைகளை தொடர்ந்து புறம் தள்ளி வருகிறது நாங்களும் தொடர்ந்து பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்துள்ளோம் அதனைத் தொடர்ந்து முதல்வரையும் அமைச்சர்களையும் சந்தித்து தங்களது கோரிக்கைகளை அளித்துள்ளோம் இழந்த போதிலும் தமிழக அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சேவை செய்யும் அரசாக இருக்கிறது

பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது இதன் காரணமாக வாடகை வாகனங்களின் விலைப்பட்டியலை உயர்த்த வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தோம் ஆனால் தமிழக அரசு தொடர்ந்து எங்களது கோரிக்கைகளை புறம்தள்ளி வருகிறது

தொடர்ந்து வாகன ஓட்டுனர்களுக்கு அதிக அளவிலான அபராதங்களை போக்குவரத்து காவல்துறையினர் விதிக்கிறார்கள்

தினம் ஒரு சட்டம் என தமிழக அரசு தொடர்ந்து தமிழக அரசு தங்களுக்கு சாதகமான சட்டங்களை இயற்றியும் மறுநாளே அந்த சட்டங்களை நீக்கியும் வருகிறது

ஆளும் கட்சி எதிர்க் கட்சிகளுக்கு நாங்கள் சொல்வது ஓட்டுநர்கள் நினைத்தால் சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரமுடியும் எங்களுக்கு சாதகமான அம்சங்களை எந்த அரசியல் கட்சி உறுதி அளிக்கிறதோ அந்த கட்சிக்கு ஆதரவாக நாங்கள் செயல்படுவோம் எனக் கூறினார்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *