இஸ்லாமியர்கள் மூட நம்பிக்கையை கைவிட வேண்டும் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு வலியுறுத்தல்.

Loading

திருச்சி: இஸ்லாமியர்கள் மூட நம்பிக்கையை கைவிட வேண்டும் என்று தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு மாநில செயற்குழு கூட்டம் திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது நிறுவனத்தலைவர் ஜைனுல் ஆப்தீன் தலைமை வகித்தார்.மாநிலச் செயலாளர் ஆல்ஃபா நசீர். வரவேற்புரையாற்றினார் மாநில செயலாளர் அப்துந் நாசிர், பாகவி பொதுச் செயலாளர் அலாவுதீன், மாநில துணைத் தலைவர் அன்சாரி, திருச்சி மாவட்ட செயலாளர் ஜாகீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
இஸ்லாமியர்கள் குர்ஆன் நபிமொழிகள் ஆகியவற்றை மட்டுமே பின்பற்றி வாழ வேண்டும். இதற்கு எதிரான தர்கா வழிபாடு, தரீக்கா, முரீது, மல்லூது, மத்ஹபு மற்றும் தாயத்து, தகடு, பில்லி, சூனியம், பேய், பிசாசு போன்ற மூடநம்பிக்கைகளையும், சூது, மது, விபச்சாரம், போதைப் பொருட்கள் போன்றவற்றையும் கைவிட வேண்டும். ஆகஸ்ட் 1ஆம் தேதி திருச்சியில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு நடத்த வேண்டும். புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடியுரிமை பதிவு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை மத்திய அரசு கைவிட வேண்டும். இதற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். வாக்குப்பதிவு எந்திரம் முறையை தவிர்த்து வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்த வேண்டும். மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கு வட்டியில்லாத நீண்டகால கடன் உதவிகளை மத்திய மாநில அரசுகள் வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும். சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும். வீட்டு உபயோக சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டாய திருமணத்திற்கு எதிராக சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். ஆனால் பொதுவாக குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை அவமதிக்கும் வகையில் லவ் ஜிகாத் என்ற வார்த்தையை உடனே மாற்றி அமைக்க வழிவகை செய்யவேண்டும்.கரோனா ஊரடகங்கால் பாதிக்கப்பட்டுள்ள ரேசன் அட்டைதாரர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். பல்கலைக்கழகங்களை மத்திய அரசு அபகரிக்கும் முயற்சியை கைவிட வேண்டும். கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள இஸ்லாமியர்களுக்கு தமிழகத்தில் 7 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *