மாண்புமிகு பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுநர் நிலை – 1 பணியிடங்களுக்கு இணையதளம் வாயிலாக கலந்தாய்வு நடைபெற்றது. இக்கலந்தாய்வில் ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த 29 பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர். இதில் 18 பணிநாடுநர்கள் மாவட்டத்திற்குள்ளும் 11 பணிநாடுநர்கள் வெளி மாவட்டத்திற்கும் பணியிடங்களை தேர்வு செய்தனர். கலந்தாய்வில் பணியிடங்களை தேர்வு செய்த பணிநாடுநர்களுக்கு மாண்புமிகு பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின்போது ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.ஆர்.முருகன் அவர்கள் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தார்கள்.