திருவள்ளூர் தலைமை அரசு பொது மருத்துவமனை அம்மா உணவகத்தை இடம் மாற்றம் செய்ய வலியுறுத்தி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் :

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.

அதே போல் திருவள்ளூரில் செயல்பட்டு வந்த தலைமை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டு மருத்துவமனை கட்டும் பணிகளுக்காக பழைய கட்டிடங்களை இடித்து தற்போது அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்.தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த அம்மா உணவகம் அமைந்துள்ள பகுதியில் தற்போது இந்த கட்டிடப் பணிகள் நடைபெற்று வருவதால் அந்த பகுதியே சேறும் சகதியுமாக மாறியதுடன் பகல் நேரங்களில் மணல் தூசி பறந்து உணவகத்தில் சாப்பிட வருபவர்கள் மீதும் தங்கள் மீதும் படிந்து பெரும் இன்னலுக்கு ஆளாகி வருவதாக அம்மா உணவக ஊழயிர்கள் தெரிவித்தனர்.

மேலும் அம்மா உணவகம் இருக்கும் இடத்தை மாற்றி தரக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அதன் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.உடனடியாக அம்மா உணவகத்தை இடம் மாற்றித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் திருவள்ளூர் தலைமை அரசு பொது மருத்துவமனை ஒட்டியுள்ள ஜெ.என்.சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சேரும் சகதியுமாக உள்ளதால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இதனால் விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.எனவே உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கான தீர்வு காண்பார்களா? என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *