தலைவாசல் ஊராட்சியில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரூபாய் 2500 கூட்டுறவு அங்காடியில் வழங்கினர்.
சேலம் புறநகர் மாவட்டம் தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தலைவாசல் கிராம கூட்டுறவு நியாய விலை கடையில் மாண்புமிகு தமிழ்நாடு மக்களின் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க
தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் உயர்திரு ஆர் இளங்கோவன் அவர்களின் ஆலோசனைப்படி பொங்கல் பரிசு ரூபாய் 2500 மற்றும் பொங்கல் வைக்கத் தேவையான பொருள்கள் மற்றும் முழுக் கரும்பு ஆகியவை இலவசமாக பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டது இந்நிகழ்வில் தலைவாசல் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஒன்றிய கழகச் செயலாளர் க.ராமசாமி அவர்கள், கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு மருதமுத்து அவர்கள் , ஒன்றிய பொருளாளர் திரு மெய்யம் அவர்கள் ,கூட்டுறவு சங்க தலைவர் திரு TM.வேல்முருகன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டுறவு சங்க இயக்குனர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்