கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் நேற்று செய்தியாளர் சந்திப்பு…….
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு நேற்று வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு விவகாரத்தில் அதிமுக – பாஜக இரு கட்சிகளும் ஏதோ நாடகம் நடத்துகிறது. விவசாயிகள் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காத நிலையில் ஜனவரி 26 ஆம் தேதி டெல்லியில் டிராக்டர் பேரணி நடைபெற உள்ளது போராட்டங்களில் ஈடுபடும் விவசாயிகளை ஆதரித்து அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று சென்னையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளதாகவும், பல்வேறு மாநிலங்கள் இந்த 3 வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் புதிய வேளாண் சட்டத்தை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சார பீரங்கியாக செயல்பட்டு வருகிறார் , தமிழக முதல்வர் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு துரோகம் செய்து வருகிறது. கொரோனா தடுப்பூசி தொடர்பாக ஒரு வெளிப்படை தன்மை வேண்டும் , விஞ்ஞாணிகள் கருத்தை கேட்டு மத்திய அரசு அதனை வெளிப்படையாக வெளியிட வேண்டும் , பி எம் கேர் நிதியை எடுத்து அனைத்து மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்க வேண்டும். குமரி மாவட்டத்தில் மலைவாழ் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் அம்மா மினி கிளினிக் அமைக்க வேண்டும். ரஜினிகாந்த் அரசியலுக்கு வர பாஜக நிர்பந்தம் செய்தது தற்போது உள்ள சூழ்நிலையில் அரசியல் கட்சி துவங்கினால் அதில் ஏற்படும் தோல்வி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என நினைத்து அரசியலில் இருந்து ரஜினி பின்வாங்கியதாக தெரிகிறது என அவர் கூறினார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்..