அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உத்ராயண புண்ணிய கால பிரமோற்சவ விழா கொடியேற்றம்…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தமிழ் மாதங்களான சித்திரை முதல் பங்குனி வரை உள்ள
12 மாதங்களும் கிரகங்களின் சஞ்சாரங்களை கொண்டு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
இதில் உத்ராயண புண்ணிய கால கொடியேற்று விழாவும் ஒன்று.
12 மாதங்களில் ஆடி மாதம் முதல் மார்கழி வரை சூரியன் தெற்கு நோக்கி நகரும் காலமாகவும்,
தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வடக்கு நோக்கி நகரும் காலமாகவும் ஆகம நூல்கள் கூறுகின்றன .
தெற்கு நோக்கி நகரும் காலத்தை தட்சணாயின புண்ணிய காலம் என்றும் ,வடக்கு நோக்கி நகரும் காலத்தை உத்தராயண புண்ணிய காலம் என்றும் அழைப்பார்கள்.வடக்கு நோக்கி நகரும் காலத்தை வேதநூல்கள் சிறப்பான காலம் என்று கூறுகிறது.
உத்ராயண புண்ணிய காலத்தை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அருணாச்சலேஸ்வரர் கோவிலில்10 நாட்கள் உற்சவம் நடைபெறும் .இந்த ஆண்டுக்கான உற்சவம் நேற்று
(5-ந்தேதி)காலை கோலாகலமாக நடந்தது. .
இதையொட்டி
அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமி -அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது்.பின்னர் கொடிமரம் முன்புள்ள விநாயகர் மற்றும் அம்பாளுடன் சந்திரசேகர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.இதைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்று விழா நிகழ்ச்சி நேற்றுகாலை 7.05 மணிக்கு தொடங்கி 9 மணி வரை நடந்தது.அப்போது சந்திரசேகரர் நடனமாடி வந்தது பக்தர்களை பரவசப்படுத்தியது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில்
பல மாதங்களுக்குப் பிறகு பக்தர்கள் கோவில் திருவிழா கொடியேற்று மற்றும் மாடவீதிகளில் உலா.விழாவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவை முன்னிட்டு தினமும் காலை மற்றும் இரவு சுவாமி- அம்பாள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
10 -வதுதிருநாளான வருகிற தை மாத முதல் நாள் ஜனவரி 14ஆம் தேதி (வியாழக்கிழமை) தாமரைகுளத்தில் நடைபெறும் தீர்த்தவாரி
நிகழ்ச்சியுடன் உத்ராயண புண்ணிய கால உற்சவம் நிறைவு பெறுகிறது.