ஸ்ரீ சக்தி அம்மாவின் 45-வது ஜெயந்தி விழா: உலக நன்மைகள் அனைத்தும் கிடைக்க தெய்வத்தின் மீது அன்பு வையுங்கள் வேலூர் விழாவில் சக்தி அம்மா பேச்சு

Loading

தெய்வத்தின் மீது உண்மையான அன்பு வைத்தால் உலகில் உள்ள அனைத்து
நன்மைகளும் நம்மை வந்து சேரும் என வேலூரில் நடந்த 45வது ஜெயந்தி விழாவில்
அருள் திரு சக்தி அம்மா பேசினார்.

வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் நாரயணி பீடம் நிறுவனர் அருள்திரு சக்தி
அம்மாவின் 45 வது ஜெயந்தி விழா நேற்று முன் தினம் கோலாகலமாக கொண்டாடப்
பட்டது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 8 மணிக்கு ஸ்ரீ
நாராயணி மூல மந்திர ஹோமம், 9 மணிக்கு ஸ்ரீ மங்கள நாராயணி பூஜை ஆகியவை நடை
பெற்றன.
அதைத் தொடர்ந்து நாராயணி வித்யாலயா பள்ளியில் இருந்து நாராயணி பீடம்
யாகசாலை மண்டபத்துக்கு மேள, தாளங்கள் முழங்க் அலங்கரிக்கப் பட்ட சக்தி
அம்மாவின் சிலை, பூங்கரகம், கலசம் உள்ளிட்டவற்றை ஏந்திய படி பக்தர்கள்
ஊர்வலமாக சென்றனர். அங்கு சக்தி அம்மாவுக்கு பாத பூஜையும், மலர்
அபிஷேகமும் மங்கள ஆரத்தியும் நடந்தது. விழாவுக்கு சக்தி அம்மா தலைமை
தாங்கி அருளாசி வழங்கி பேசியதாவது:-
தெய்வத்தின் மீது அன்புஅம்மா மீது குழந்தை அன்பு வைத்தால், பாசமும் தந்தை மீது அன்பு
செலுத்தினால் பதிலுக்கு அறிவும் கிடைக்கும். குரு மீது அன்பு வைத்தால்
பதிலுக்கு ஞானம் கிடைக்கும். தெய்வத்தின் மீது அன்பு வைத்தால் உலகத்தில்
உள்ள அனைத்து நன்மைகளும் கிடைக்கும். அந்த அன்பின் பெயர் தான் பக்தி.
ஒருவரிடத்தில் பக்தி இருந்தால் வாழ்க்கையில் அனைத்து சக்திகளும்
கிடைக்கும். அனைவரும் மற்றவர்கள் மீது அன்பும், தெய்வத்தின் மீது
பக்தியும் செலுத்த வேண்டும்.
அன்பு ஒருவர் மீது நல்ல எண்ணத்தை தரும். பக்தி ஒருவருக்கு வாழ்க்கை
முழுவதும் துணையாக வரும். அம்மாவின் அருள் இருந்தால் ஒருவருக்கு பக்தி
வரும். சிலருக்கு சொத்து மீது ஆசை இருக்கும். அதே போல் தற்போது வைத்து
இருக்கிற சொத்தை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் எனக்கு
நீங்கள் தான் சொத்து. உங்களுக்கு அனைத்து செல்வங்க்களும் வளங்களும்
கிடைக்க ஆசி வழங்குகிறேன்.
இவ்வாறு சக்தி அம்மா பேசினார்.
விழாவில் மத்திய மந்திரி சோம் பிரகாஷ் பேசினார். முன்னதாக சக்தி
அம்மாவுக்கு திருப்பதி ஏழுமலையான் கோவில், காஞ்சி காம கோடி பீடம், வேலூர்
கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்கள் சார்பில் பிரசாதம்
வழங்கப் பட்டது. விழாவில், எம்.எல்.ஏக்கள் நந்தகுமார், ப. கார்த்திகேயன்,
கோவை ஆதீனம் சிவலிங்கேஸ்வரசுவாமி, வாலாஜா தன்வந்திரி பீடம் முரலீதர
சுவாமி, முன்னாள் மத்திய மந்திரி என்.டி.சண்முகம், திருமலை திருப்பதி
தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி மனைவி சொர்ணலதா, ஸ்ரீபுரம்
நாரயணி பீடம் இயக்குனர் சுரேஷ்பாபு, நாராயணி மருத்துவமனை இயக்குனர்
பாலாஜி, அறங்காவலர் சவுந்தர் ராஜன், நாராயணி பீடம் மேலாளர் சம்பத்,
முன்னாள் எம்.எல்.ஏ. கலையரசு, ஜெய் ஸ்ரீராம் சேவா சங்க தலைவர்
டி.கே.டி.ஜி. சீனிவாசன், அமைப்பாளர் இளங்கோவன், இளைக்னர் அணி பொருளாளர்
சக்திவேலன், மாநகர செயலாளர் வெங்கடேசன், கர்ணசீலன், வாலாஜா வி.பி.
நாராயணன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *