திருவண்ணாமலை மாவட்டத்தில் 7லட்சத்து 50 ஆயிரத்து 351 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கிவைத்தார்
தமிழர் பண்டிகை என்று போற்றப்படும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை அகதிகள் தமிழர் குடும்பத்தினர் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது.அதன்படி திருவண்ணாமலையை அடுத்த வேங்கி காலில் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடையில் நேற்று காலை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார்.
ஒரு குடும்ப அட்டைக்கு 1கிலோ பச்சரிசி, 1கிலோ சர்க்கரை ,1 முழுக் கரும்பு, 20 கிராம் முந்திரி ,20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ரூ 2500 ரொக்கம் மற்றும் துணிப்பை ,விலையில்லா வேட்டி- சேலை ஆகியவை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி. கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவுப்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதனை (4-ந்தேதி)முதல் வருகிற 12-ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்.விடுபட்டவர்களுக்கு வருகிற13-தேதி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.திருவண்ணாமலை மாவட்டத்தில்7 லட்சத்து 50 ஆயிரத்து 351குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்புடன்
ரூ. 2500 ரொக்கம் வழங்கப்பட உள்ளது. மேலும் பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி- சேலைகளும் பிளாஸ்டிக் பொருள்கள் அரசாங்கத்தால்தவிர்க்கப்பட்டது இதனால் கைப்பையில்வழங்கப்பட உள்ளது . பின்னர் இரண்டாம் கட்டமாக கொரோனா நோய்த் தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது இதனால்பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் மற்றும் முக கவசம் அணிந்து கொண்டே இருக்க வேண்டும். மற்றும் பொங்கல் பொருட்கள்
இதனை பெறும் பொங்கல் சிறப்பாக எல்லோரும் கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, ஆவின் தலைவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஆவின் தலைவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ,திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பெருமாள் நகர் கே.ராஜன் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ,மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைபதிவாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.