தலைவாசலில் அருகே ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு ரூபாய் .2,500 வழங்கினார்…

Loading

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தலைவாசல் அருகே நாவக்குறிச்சி மற்றும் பட்டுதுறை கிராமத்தில் ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2500 பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் நேற்று திங்கட்கிழமை தொடங்கியது போலீஸ் பாதுகாப்புடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை யொட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 2,500 ,ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சக்கரை 20 கிராம் திராட்சை 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய் , முழு கரும்பு( சுமார் 5 அடி நீளம்) மற்றும் துணிப்பை (ஜெயலலிதா – எடப்பாடி பழனிச்சாமி உருவம் பொறித்தது ) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது
இத்திட்டத்தை கடந்த 20ஆம் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி யார் பழனிச்சாமி சென்னையில் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தனர்.
பொங்கல் பரிசு தொகுப்பிலுள்ள திராட்சை முந்திரி ஏலக்காய் ஆகிய பொருட்கள் அந்தந்த ரேஷன் கடைகளுக்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கூட்டுறவு பண்டகசாலை மூலம் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது ரேஷன் கடை ஊழியர்கள் அதனை எடை ஏற்ப பேக்கிங் செய்து துணிப்பையில் போட்டு தயாராக வைத்துள்ளனர் எனவே ரேஷன் கடையில் ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை ஆகிய மட்டும் எடை போட்டு வழங்கப்பட உள்ளது
கொரோனா பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாகும் கூட்ட நெரிசலால் ஏற்படும் அசம்பாவித சம்பவம் தடுக்கும் நடவடிக்கை ஆகும் காலை 9 மணி முதல் 13:30 வரையும் மதியம் 2 30 மணி முதல் மாலை ஐந்து முப்பது மணி வரையிலும் என 2 ஷப்டுகளாக பொருட்கள் விநியோகிக்கப்பட்ட உள்ளது
அரிசி அட்டைதாரர்கள் அந்தத் தேதியில் பொருட்கள் வாங்க வரவேண்டும் என்பது குறித்து ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக வழங்கி டோக்கன் களில் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளது எனவே அதன் அடிப்படையில் காலை வேளையிலும் 100 பேருக்கும் மதிய வேளையிலும் 100 பேருக்கும் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது
ஊழியர்களுக்கு பல்வேறு தடை விதிப்பு
ரூபாய் 2500 வெளிப்படையாக கையில் தான் வழங்கப்படவேண்டும் கவரில் போடப்பட்டு வழங்கக் கூடாது என்று கடை ஊழியர்களுக்கு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்
வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் வரிசையில் நிற்க வைக்காமல் முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கு முதலில் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் ஆண்கள் பெண்கள் தனி தனி வரிசை ஏற்படுத்த வேண்டும் பொருட்கள் வாங்க வருபவர்கள் முக கவசம் சமூக இடைவெளி ஆகிய கொரோனா பாதுகாப்பு நடை முறைகளை முறையாக கடைப்பிடிக்கிறார்கள்? என்பதையே உள்பட பல்வேறு நிந்தனைகள் ரேஷன் கடை ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது
ரேஷன் கடையில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் ஒவ்வொரு கடையிலும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூட்டுறவு துறை சார்பில் அந்தந்த மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் மனு அளிக்கப்பட்டுள்ளது எனவே போலீஸ் பாதுகாப்புடன் ரூபாய் 2500 பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் உள்ளது எனில் குறிப்பிட்ட நாளன்று வர முடியாதவர்கள் 13 ஆம் தேதி அன்று பணத்தையும் பொருட்களையும் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது தற்பொழுது பொங்கல் பண்டிகைக்கு முன்பு பொருட்களை பெற முடியாதவர்கள் 19ஆம் தேதி பெற்றுக் கொள்ளலாம் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜ் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் டாக்டர் எடப்பாடி கே . பழனிச்சாமி அவர்கள் தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை கொண்டாட வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையோடு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2500 ரொக்க பணமும் அரிசி சர்க்கரை திராட்சை மற்றும் முழுக் கரும்பும் வாரி வழங்கினார் மற்றும் பட்டுதுறை மற்றும் நாவக்குறிச்சி கிராம அங்கன்வாடி கடையில் பொங்கல் பரிசு வழங்கும் விழாவிற்கு தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் உயர்திரு ஆர் இளங்கோவன் வழிகாட்டுதலின்படி தலைவாசல் ஒன்றியக்குழு தலைவர் மற்றும் ஒன்றிய கழக செயலாளர் க. ராமசாமி ஆலோசனைப்படி சேலம் புறநகர் மாவட்டம் தலைவாசல் ஒன்றியம் நாவக்குறிச்சி மற்றும் பட்டுதுறை ஊராட்சியில் பொங்கல் பரிசு பொருட்கள் எண் 3481அண்ணா தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் பாலகிருஷ்ணன் பரிசு பொருட்கள் வைத்து சிறப்பு விருந்தினராக சேலம் பால்பண்ணை துணைத் தலைவர் மற்றும் கழக மாவட்ட பொறுப்பாளரும் பட்டு துறை ஊராட்சி மன்ற தலைவர் திரு ஜெகதீசன் மற்றும் இயக்குனர்கள் காளிமுத்து, ராமலிங்கம், செல்லம் , மாரிமுத்து, பழனியம்மாள் , அய்யாவு, அன்பு, ராஜேந்திரன் , கூட்டுறவு சங்க கதை செயலாளர் ரத்தனம் இவர்களுடன்கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் பால் செகரட்டரி தலைவர் மற்றும் கழக தோழர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் இவர்களுடன் இ. சுந்தர் நவக்குறிசி ஊராட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *